சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

Photo: Changi Airport

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலாத்துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து எட்டாவது மாதமாக உயர்ந்துள்ளதாகவும், கடந்த ஆகஸ்ட் மாதம் 7,28,744 வெளிநாட்டு பயணிகள் வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதம் 7,52,305 ஆக அதிகரித்துள்ளது. இது சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதற்கான சாத்தியக் கூறுகளாகப் பார்க்கப்படுகிறது.

எமர்ஜன்சி லைட்டில் வைத்து தங்கம் கடத்தல்…. பெண் பயணி கைது!

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் இந்தோனேசியா நாட்டு பயணிகள் முதலிடத்தில் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் இந்திய பயணிகளும், மூன்றாவது இடத்தில் மலேசிய பயணிகளும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வரை சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 2.96 மில்லியன் ஆகும். அதிகமான வெளிநாட்டு பயணிகள் வருகையில், இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஆகஸ்ட் மாதம் நிலவரப்படி, சுமார் 5,88,870 இந்தோனேசியர்கள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இந்தியாவைச் சேர்ந்த 3,78,490 பயணிகளும், மலேசியாவைச் சேர்ந்த 2,64,170 பயணிகளும், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 2,58,670 பயணிகளும், வியட்நாமைச் சேர்ந்த 1,77,510 பயணிகளும் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.

அக்.16- ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா!

நடப்பாண்டு இறுதிக்குள் சிங்கப்பூருக்கு வருபவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.