சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது இந்திய அரசு- விரிவான தகவல்!

(PHOTO: Dhany Osman/Yahoo News Singapore)

சர்வதேச விமான பயணிகளுக்கான (Foreign Travellers) கொரோனா கட்டுப்பாடுகளை இந்திய அரசு தளர்த்தியுள்ளது. மேலும், சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களையும் (Covid-19 Guidelines) இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (10/02/2022) வெளியிட்டுள்ளது.

ஸ்ரீ சிவன் கோயில் பிப்.14 வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு!

அதன்படி, கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்ட, அதாவது இரண்டு டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் இனி தங்களை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. எனினும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்கு தங்களின் உடல்நிலையை சுயமாகக் கண்காணித்து (Self Monitoring) கொள்ள வேண்டும். அந்த நாட்களில் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன், சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்; அருகில் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு செல்ல வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்று குறைவால், விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா ‘RTPCR’ மருத்துவ பரிசோதனை கட்டாயமில்லை. மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை ‘நெகட்டிவ்’ சான்றிதழ் (அல்லது) இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை ஏர் சுவிதா செயலி (Air Suvidha) அல்லது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அத்துடன், பயணிகள் தங்களின் கடந்த 14 நாட்கள் பயண விவரங்களையும், இந்த இணையதள பக்கத்தில் உள்ள படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

சுமார் 116 கிராம் தங்கத்தை வாயில் வைத்து கொண்டு வந்த ஊழியர் – பீப் சத்தம் மூலம் சிக்கினார்!

கொரோனா நோய்த்தொற்று அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட ‘Risk’ மற்றும் ‘Non- Risk’ என்ற நாடுகளின் பட்டியலையும் நீக்கியுள்ளது. இந்த புதிய நடைமுறைகள் அனைத்தும் வரும் பிப்ரவரி 14- ஆம் தேதி அன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்திய அரசின் அறிவிப்பால், வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.