வெளிநாட்டு ஊழியரை ஆயுதத்தால் தாக்கியவர்..போலியாக தாக்குவது போன்று நடித்ததாக வாதம்!

JUDGEMENT

முன்னாள் சேனல் 8 நடிகர் Ng Aik Leong என்பவர், பங்களாதேஷ் ஊழியரை உலோகக் கருவியால் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அந்த தாக்குதலின் போது விளையாட்டாக அந்த ஊழியரைக் குத்தியதாக நீதிமன்ற விசாரணையில் அவர் கூறியுள்ளார்.

கொரோனா: வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்பு!

பங்களாதேஷ் ஊழியர்

35 வயதான ஜாஹிதுல் என்ற அந்த பங்களாதேஷ் ஊழியர், கடந்த 2018 அக்டோபரில் HYL என்ற நிறுவனத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டார்.

ஒரு ஆபத்தான ஆயுதத்தால் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் Ng மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கருவியால் தாக்கியதாக நம்பப்படுகிறது

அவர் டிசம்பர் 11, 2018 அன்று சிங்கப்பூர் இஸ்லாமிக் ஹப் உணவகத்தில் இருந்தபோது, திரு ஜாஹிதுலின் தலையில் அடித்து, அடிவயிற்றில் உலோகக் கருவியால் தாக்கியதாக நம்பப்படுகிறது.

அந்த நேரத்தில் ஊழியர் காயமடையவில்லை என்றும், தாக்குவதைப் போல நடித்துக்கொண்டிருந்ததாகவும், மேலும் ஜாஹிதுல் நல்ல நண்பன் என்றும்
Ng கூறினார்.

மறுப்பு

ஆனால், அவரின் வாதத்தை பங்களாதேஷ் ஊழியர் மறுத்துள்ளார்.

அப்படி எதுவும் இல்லை என்றும், அவர் என்னை ஒருபோதும் தனது நண்பரைப் போல நடத்தவில்லை என்றும் ஜாஹிதுல் மறுப்பு கூறினார்.

சட்டம்

ஆபத்தான ஆயுதத்துடன் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிரம்படி விதிக்கப்பட மாட்டாது.

மேலும், வழக்கு விசாரணை இன்று தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் நாளிதழ் வாங்கினால் பிரியாணி இலவசம்… அசத்தும் சிங்கப்பூர் தமிழர் உணவகம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…