கொரோனா: வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்பு!

Singapore New dormitory COVID-19
(PHOTO: AFP)

சிங்கப்பூரில் இன்றைய (டிச.1) நிலவரப்படி, புதிதாக 10 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

தமிழ் நாளிதழ் வாங்கினால் பிரியாணி இலவசம்… அசத்தும் சிங்கப்பூர் தமிழர் உணவகம்!

தனிமை

அவர்கள் இங்கு வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சமூக பரவல்

புதிய பாதிப்புகளில் ஒருவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் ஒரு புதிய பாதிப்பு பதிவாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்த பாதிப்பு

இந்த புதிய பாதிப்புகளுடன் சேர்த்து, சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 58,228ஆக உள்ளது.

மேலும் விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தேக்கா நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற தொற்று பாதித்த நபர்கள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…