தொடரும் மரணங்கள்… மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் 20மீ உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலி

foreign worker fall death
Google Maps

வெஸ்ட் கோஸ்ட்டில் (West Coast) அமைந்துள்ள கூட்டுரிமை (condominium) கட்டிடத்தின் கூரையில் இருந்து விழுந்த வெளிநாட்டு ஊழியர் உயிரிழந்தார்.

சுமார் 20 மீ தொலைவில் இருந்து 37 வயதான அவர் விழுந்து இறந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (மே 31) தெரிவித்துள்ளது.

ஒரே வாரத்தில் இது மூன்றாவது வேலையிட மரணம் என்பது நம்மை மேலும் சோகத்தில் ஆழ்த்துகிறது.

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இளைஞர் கைது – போலிஸ் விசாரணை

வங்காளதேசத்தை சேர்த்த அந்த ஊழியர் கடந்த மே 24 அன்று காலை 10.45 மணியளவில் வெஸ்ட் கோஸ்ட் கிரசென்ட், வெஸ்ட்கோவ் காண்டோமினியம் 16 இன் மேற்கூரையில் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது வழுக்கி கீழே விழுந்ததாக MOM கூறியுள்ளது.

20 மீ தொலைவில் இருந்து விழுந்த அவர், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் சிறிது நேரத்தில் இறந்தார்.

அவருக்கு வேலை வழங்கிய நிறுவனம் RJ Contract என்றும் அமைச்சகம் கூறியது. இந்த சம்பவம் குறித்து MOM விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 25 வேலையிட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கிரேன் கவிழ்ந்து விழுந்ததில், பெரிய குழாயில் சிக்கிக்கொண்ட ஊழியர் உயிரிழப்பு – தொடரும் சோகம்

சிங்கப்பூரில் சுமார் 9.5மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானம், சென்னைக்கு மாற்றம்: கடும் அவதியை சந்தித்த பயணிகள்!