சிங்கப்பூரில் வேலை.. உணவு, போக்குவரத்துக்காக நாள் ஒன்றுக்கு S$13 மட்டும் செலவிடும் வெளிநாட்டு ஊழியர்

indian worker jailed stalking woman work
Singapore

சிங்கப்பூரில் முழுநேரம் பணிபுரியும் 27 வயதான வெளிநாட்டு ஊழியர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 10 வெள்ளியில் வாழ்க்கையை எவ்வாறு நடத்தலாம் என்பதை செய்து காட்டியுள்ளார்.

அதனை வெளிப்படுத்தும் விதமாக TikTok காணொளி ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.

விமானத்தில் நடந்த முகசுளிப்பு சம்பவம்.. பயணி இருவரிடம் மன்னிப்பு கேட்ட SIA

“பகுதி 6: சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் நாள் ஒன்றுக்கு 10 டாலர்கள் செலவழித்தால் போதுமா?” என்ற தலைப்புடன் கூடிய காணொளியை அவர் வெளியிட்டுள்ளார்.

ஜொனாதன் லிம் என்ற அவர் சிங்கப்பூரில் சிவில் இன்ஜினியராக பணிபுரிகிறார், அவர் மலேசியாவை சேர்ந்தவர்.

லிம் கூறுகையில்; அவர் வாரத்தில் பாதி நாளுக்கு மேல் ஜோகூரில் உள்ள அவர் வீட்டில் வசிப்பதாகவும், மேலும் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சிங்கப்பூருக்கு வேலைக்காக வருவதாகவும் சொன்னார்.

via @jonlzx TikTok

அவருக்கு அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து வேலை என்று பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு சிங்கப்பூர் சென்று இரண்டு இரவுகள் விடுதியில் தங்குவதாகவும் கூறியுள்ளார்.

அவர் ஒரு இரவுக்கு சுமார் S$35 (RM120) செலுத்துவதாகவும், மேலும் வேலை முடிந்து புதன்கிழமை மாலை மலேசியா செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மதிய உணவுக்காக அவர் S$3.60 செலவழிப்பதாகவும், அதில் இறைச்சி உணவு, காய்கறிகள் மற்றும் சாதம் ஆகியவை அடங்கும் என்றும் கூறியுள்ளார்.

வேலை முடிந்த பிறகு லிம் அருகிலுள்ள பேக்கரியில் இருந்து கிரான்பெர்ரி கிரீம் சீஸ் ரொட்டியை S$1.50க்கு வாங்கி உண்பதாக சொன்னார்.

via @jonlzx TikTok

பொது மைதானத்தில் அவர் இலவசமாக உடற்பயிற்சி செய்வதாகவும், பின்னர் FairPrice-ல் இருந்து S$5 மதிப்புள்ள க்ரில் செய்யப்பட்ட chicken drumsticks உணவை வாங்கி சாப்பிடுவதாகவும் கூறியுள்ளார்.

தங்குமிடம் செலவை சேர்க்காமல், லிம் தனது போக்குவரத்துச் செலவுகளான S$3 வெள்ளியும், ஒரு நாளில் மொத்தம் S$13.10 மட்டுமே செலவிடுவதாக கூறினார்.

இது உங்களுக்கு சாத்தியமா கமெண்ட்ல சொல்லுங்க.

தன் மனைவியை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு கணவர் – குற்றம் நிரூபணமானால் சிங்கப்பூரில் மரண தண்டனை உண்டு