“வேலை இல்ல, கட்டுப்பாடுகள் பிடிக்கல, குடும்பங்களைப் பார்க்க” நாடு திரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள்… இது சிங்கப்பூர் ஊழியர்களுக்கு வாய்ப்பாக அமையுமா?

வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR
Illustration: Anam Musta'ein

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, அனைத்து திறன் சார்ந்த துறைகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரை விட்டு வெளியேறி வருகின்றனர்.

வெளிநாட்டு ஊழியரை பொறுத்தவரை, சிலர் தங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் இல்லாததால் வெளியேறியுள்ளனர்.

உள்ளாடையிலுமா?…விமான நிலையத்தில் சிக்கிய 3 பெண்கள் – எப்டிலாம் யோசிக்கிறாங்க!

வெளியேறிய மற்றவர்கள் சிங்கப்பூரில் நடப்பில் உள்ள கோவிட்-19 கட்டுப்பாடுகள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக மிகவும் கடுமையாகக் உள்ளதாக கருதுகின்றனர்.

நடுத்தர மற்றும் குறைந்த திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள், பலர் தங்கள் குடும்பங்களைப் பார்க்கத் நாடு திரும்பியுள்ளனர்.

மேலும் சிலர் சொந்த நாடு திரும்புவதற்கான அனுமதியைப் பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

பொதுவாக வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருக்கும் நிறுவனங்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தினாலும், சிங்கப்பூர் ஊழியர்களுக்கு இது அதிக வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

சிங்கப்பூரர்களை வைத்து மனிதவள தேவைகள் சிலவற்றைச் பூர்த்தி செய்ய முடியும் என்றாலும், சிங்கப்பூர் அதன் உலகளாவிய மைய நிலையைத் தக்கவைக்க அதன் ஊழியர்களில் குறிப்பிட்ட பங்கில் வெளிநாட்டினரும் தேவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்: சாலையில் குட்டிக்கரணம் அடித்து தீ பற்றி கொடூர விபத்து – (காணொளி)