சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் நெரிசலை குறைக்கலாம் – நிபுணர்கள் கருத்து..!

(Photo: Kirsten Han)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளின் தோற்றம், புதிய பாதுகாப்பு வழிகாட்டி விதிகளின் கீழ் சற்று வித்தியாசமாக அமைந்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகளின் ஒவ்வோர் அறையிலும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கூடுதலாக குறைப்பதன் மூலம் நோய்ப்பரவலை மேலும் கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பது சில நிபுணர்களின் கருத்து என்று செய்தி மீடியாகார்ப் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்திய நாட்டவர் மரணம் – சுகாதார அமைச்சகம்..!

இதற்கு முன்னர், விடுதிகளின் ஒரு அறைக்குள் படுக்கைகளின் எண்ணிக்கைக்கு வரம்பு கிடையாது, அதாவது சராசரியாகப் 12 முதல் 16 படுக்கைகள் போடப்பட்டிருக்கும். ஆனால் தற்போது அதன் எண்ணிக்கையானது 10க்குக் குறைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு படுக்கைக்கும் இடைவெளியானது 1 மீட்டர் தூரம் விட்டு அமைக்கப்பட்டிருக்கும். அதே போல், 15 படுக்கைகளுக்கு ஒரு கழிப்பறை என்பதற்குப் பதில் 5 படுக்கைகளுக்கு ஒரு கழிப்பறை என்ற வசதி அமைத்துக்கொடுக்கப்படும்.

தற்போது ஆயிரம் படுக்கை வசதிகளுக்கு ஒரேயொரு சிகிச்சை அறை அமைந்துள்ளது, அது தற்போது 15க்கு உயர்த்தப்படும். மேலும், ஒவ்வொருவருக்கும் 4 சதுர மீட்டர் வசிப்பிட இடைவெளி வழங்கப்பட்டுள்ளது, அது 6 சதுர மீட்டருக்கு அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட இந்த வழிகாட்டுதலின் தொடர்பில் சில நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என்று செய்தி மீடியாகார்ப் குறிப்பிட்டுள்ளது.

Source : Seithi MediaCorp

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக COVID-19 தொற்று பாதித்தவர்கள் சென்று வந்த இடங்கள் வெளியீடு..!