புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை என்ன? – சிங்கப்பூரில் இப்படியெல்லாமா நடக்குது!!

Indian charged for duping insurers for foreign workers injury claims

சிங்கப்பூரில் சமூக நிகழ்வுகளில் பங்களித்து வந்த வங்கதேச ஊழியரின் வேலை அனுமதிச் சீட்டு புதுப்பிக்கப்படாதது குறித்து மனிதவள அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.சிங்கப்பூரில் 19 ஆண்டுகள் கட்டுமானத் துறையில் ஊழியராக சாகிர் கோகன் பணியாற்றியதாக அமைச்சகம் சுட்டிக் காட்டியது.

அந்த ஊழியர் பலமுறை இங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எழுதியதாகவும் இருப்பினும் அவரது வேலை அனுமதிச் சீட்டு புதுப்பிக்கப்படாததாகவும் அமைச்சகம் கூறியது.ஆனால் ஒருவர் வெளியிடும் பதிவுகள் கோவத்தை தூண்டும் வகையிலோ,தவறானதாகவோ இருக்கும்பட்சத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நேரும் என்று அமைச்சகம் கூறியது.

கடந்த ஆண்டு அக்டோபரில், அவர் தங்கும் விடுதியில் ஏற்பட்ட கலவரம் குறித்து பதிவிட்டிருந்தார்.பெருந்தொற்றின் போது நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்வதில் ஏற்பட்ட தாமதம் போன்றவை தொடர்பாக தொழிலாளர்களுக்கும் விடுதி நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.உடனடியாக காவல்துறைக்கு அழைப்பு விடுத்தால் காவல்துறை அதிகாரிகள் விரைந்தனர்.

சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அப்போது உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.ஆனால் சாகிர் சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அடிமைகளைப்போல் நடத்தப்படுவதாகவும் ,ஆயுதப்படை மற்றும் ராணுவப்படையினர் விடுதியை எப்போதும் சுற்றி வளைத்திருப்பதாகவும் எழுதியிருந்தார்.

அவர் தவறாக சித்தரித்துள்ளதாக மனிதவள அமைச்சகம் சுட்டிக்காட்டியது.அவரது வேலை அனுமதி காலாவதியாகி விட்ட நிலையில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.ஜூன் 15-ஆம் தேதி தாயகம் திரும்பிய தொழிலாளர் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றதுடன் இலக்கியக்குழு ஒன்றைத் தொடங்கியுள்ளார்.