வெளிநாட்டு ஊழியர்கள் செல்லும் லாரிகளில் கட்டாய அம்சங்கள் – “இருந்தாலும்…” என்று முணுமுணுக்கும் கட்டுமான நிறுவனங்கள்!

ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR

சிங்கப்பூரில் லாரிகளில் செல்லும் ஊழியர்களுக்கு தேவையான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த பொருளாதார உதவி தேவை என்று கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஊழியர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் கூடுதல் கட்டாய அம்சங்களை வட்டார அமைச்சர் எமி கோர் கடந்த மார்ச் 9 அன்று தெரிவித்தார்.

லாட்டரி வாங்கியவர், கொண்டு சென்றவர் உட்பட 12 பேரிடம் போலீஸ் விசாரணை

கட்டாய அம்சங்கள்

அதில் ஊழியர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் அவசியம் என்றும் அவர் கூறினார்.

அதே போல, மழைக் காலங்களில் ஊழியர்களை பாதுகாக்க முழு மேற்கூரை அமைப்புகள் கட்டாயமாக்கப்படும் என்றார் அவர்.

“ஊழியர்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க, சமநிலையான அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்றும், நிலையான மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

நிதியுதவி தேவை

இந்நிலையில், லாரிகளில் ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய நடவடிக்கைகளை செயல்படுத்த நிதியுதவி தேவை என்று தொழில்துறையினர் கூறுகின்றனர்.

தொற்றுநோயின் கடுமையான தாக்கத்தால் கட்டுமானத் துறை தொடர்ந்து போராடி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், கட்டுமான செலவுகள் அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற செலவுகளுக்கு நிதி உதவி தேவை என நிறுவனங்கள் கூறுகின்றன.

சில நிறுவனங்கள் லாரிகளுக்கு பதிலாக பேருந்துகளை செயல்படுத்தினாலும், பேருந்துக்கு மாற விரும்பும் நிறுவனங்களுக்கு மிக பெரிய செலவினம், நடைமுறை சிக்கல் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றன.

எப்படி இருந்தாலும் வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்புக்கு தான் அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இனி இதெல்லாம் “கட்டாயம்” – அதிரடி அறிவிப்பு

வேகக் கட்டுப்பாட்டு கருவி

அதிகபட்சமாக 3,500 கிலோ எடைக்கு அதிகமுள்ள ஊழியர்களை ஏற்றி செல்லும் அனைத்து லாரிகளிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும்.

இந்த வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் ஏற்கனவே அதிகபட்சமாக 12,000 கிலோ எடையுள்ள அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

அதே வேளையில், அதிகபட்சமாக 3,500 கிலோ எடையுள்ள அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் வேக எச்சரிக்கை கருவிகள் தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, அனைத்து லாரிகளிலும் வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டும்.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு – தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு வந்ததில் மகிழ்ச்சி!