லாட்டரி வாங்கியவர், கொண்டு சென்றவர் உட்பட 12 பேரிடம் போலீஸ் விசாரணை

police investigation for illegal gambling
SPF

சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 34 – 80 வயதுக்குட்பட்ட 11 ஆடவர்கள் மற்றும் பெண் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 9 வரை உட்லண்ட்ஸ் காவல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவர்கள் சிக்கினர்.

“சிறந்த வேலை, அதிக சம்பளம்” என்ற ஆசை வார்த்தைக்கு ஏமாந்துபோன தமிழக ஊழியர் – ரூ. 1 லட்சத்தை இழந்த பரிதாபம்

அதாவது, அவர்கள் மார்சிலிங் சாலை, மார்சிலிங் கிரசண்ட் மற்றும் உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 32 ஆகிய இடங்களில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதில் 34 மற்றும் 65 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்கள், ஏழு பேருக்கு பந்தய கணக்கர்களாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் S$470க்கும் அதிகமான ரொக்க பணம், கைபேசி போன்கள் மற்றும் சூதாட்டம் தொடர்பான சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

பொது இடங்களுக்கு லாட்டரியை எடுத்துச் செல்ல உதவும் நபர் என கூறப்படும் 80 வயது முதியவர் ஒருவரிடமிருந்து லாட்டரி டிக்கெட்டை வாங்கியதாக 71 வயதான பெண் பிடிபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த ஊழியர்… திருச்சி விமான நிலையத்தில் கைது – போலீசில் ஒப்படைப்பு