மூன்று லாரிகள் மோதி விபத்து: 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவனையில்…

Foreign workers lorry accident kranji-expressway

கிராஞ்சி விரைவுச்சாலையில் மூன்று லாரிகள் விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட 26 பேர் மூன்று மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதாவது, 12 பேர் இங் டெங் போங் மருத்துவமனைக்கும், ஆறு பேர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும், 8 பேர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தியப் பெண்ணை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு பணிப்பெண் – கடும் கோபத்தில் செய்த கொடூர செயல்

இந்த விபத்து குறித்து ஜூலை 18 அன்று காலை 7:10 மணியளவில் போலீசார் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.

புக்கிட் திமா விரைவுச்சாலையை நோக்கி செல்லும் வழியில் உள்ள சோவா சூ காங் வே மேம்பாலம் அருகே இந்த விபத்து ஏற்பட்டது.

அதில் இரண்டு லாரிகள் வெளிநாட்டு ஊழியர்கள்களை ஏற்றிச் சென்றதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது, விபத்தில் சிக்கிய ஊழியர் ஒருவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அது தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய லாரி ஒன்றின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு லாரியின் முன் பயணிகள் இருக்கையில் சிக்கியிருந்த இருவரை ஹைட்ராலிக் மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி SCDF மீட்டது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் எகிறும் வாடகை… “இனி முதலாளிகள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” – MOM