சக ஊழியர் தன்னை விட சிறப்பாக நடத்தப்படும் வெறுப்பில் வாகனத்தை சேதப்படுத்தியவருக்கு அபராதம்..!

tada-driver-fined-racist-remarks-passenger

ஒரு சக ஊழியர் தன்னை விட சிறப்பாக நடத்தப்படும் வெறுப்பில், நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான வாகனத்தின் கேபிள்களை வெட்டியதாக முன்னாள் மீடியா கார்ப் பொறியாளர் மீது அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது,

அவர் வாகனத்தின் கேபிள்களை வெட்டியதில் சுமார் S$2,000-க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 தடுப்பு மருந்து உலகளவில் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வது முக்கியம் – சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா இணக்கம்..!

இந்த தவறான செயலுக்காக, 34 வயதான குவெக் பெஹ் ஜியாவுக்கு (Quek Peh Jia) S$5,000 அபராதம் நேற்று (ஆகஸ்ட் 4) விதிக்கப்பட்டது.

தனது சக ஊழியரான 51 வயது நிரம்பிய மூத்த பொறியாளர், குவெக்கை விட சிறப்பாக நிறுவனத்தில் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணி நியமிப்பில் ஏற்றத்தாழ்வு இருந்ததாகவும் அவர் கூறியதாக, துணை அரசு வக்கீல் கேப்ரியல் லிம் கூறினார்.

இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம், புக்கிட் படோக் டிரான்ஸ்மிட்டிங் நிலையத்தில் மீடியாக்கார்ப் நிறுவனத்தைச் சேர்ந்த Mercedes ACTROS வாகனத்தின் நைட்ரஜன் ஆக்சைடு சென்சாரின் கேபிளை அவர் வெட்டினார் என்று கூறப்படுகிறது.

பின்னர், அந்த பழியை அவர் தனது சக ஊழியர் மீது சுமத்தியதாகவும், மேலும் அவர் நிறுவனத்தில் மீது அதிருப்தி அடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், மற்றொரு வாகனத்தில் வெட்டப்பட்ட கேபிள்கள் குறித்து காவல்துறையிடன் குவெக்கின் மேலாளர் புகார் செய்தார். அது மீடியாக்கார்ப் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஆகும்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் கண்காணிப்புக் காட்சிகள் மூலம் லாரி கேபிள்களை வெட்டியவர் குவெக் என்பது தெரியவந்தது.

தீங்கு விளைவிக்கும் நோக்கில் S$500 அதிகமாகச் சேதங்கள் ஏற்படுத்திய குற்றத்திற்காக, அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 127 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று இல்லை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg