சிங்கப்பூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 12 வயது சிறுமி உட்பட 4 சிறுவர்கள் கைது..!

Four youths, including 12-year-old, arrested for robbery with hurt
(PHOTO: WALB)

சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 11 மணி அளவில், டாக்சி ஓட்டுநர் (64) ஒருவர் தாக்கப்பட்டு, அவரிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சுங்காய் தெங்கா (Sungei Tengah) சாலையில் நான்கு பேரை டாக்சியிலிருந்து இறக்கிவிட்ட பின்னரே, அந்த ஓட்டுநர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் கிருமித்தொற்று தொடர்பான விதிகளை பலமுறை மீறிய பெண்ணுக்கு S$4,000 அபராதம்..!

இதனையடுத்து, ஓட்டுநர் மீது காயம் ஏற்படுத்தி கொள்ளையடித்தற்காக சந்தேகத்தின் பேரில், 12 வயது பெண் பிள்ளை உட்பட 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் பிள்ளை உட்பட 4 சிறுவர்களுக்கும் வயது 12 முதல் 16 வரை இடைப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் அடிப்படையாகக் கொண்டு சந்தேகிக்கப்பட்ட நபர்களின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும், இன்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் ஆறு மாதங்களில் முதன்முறையாக தங்கும் விடுதிகளில் புதிய கிருமித்தொற்று பதிவாகவில்லை.!

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டு சிறைத் தண்டனையும், குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் மற்றொரு சம்பவத்தில், வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…