புக்கிட் மேரா, ரெட்ஹில் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு இலவச COVID-19 சுய பரிசோதனை கருவி.!

Bukit Merah View Reopen
Pic: Google Street view

சிங்கப்பூரில் உள்ள புக்கிட் மேரா (Bukit Merah) மற்றும் ரெட்ஹில் (Redhill) வட்டாரத்தில் வசிக்கும் குறிப்பிட்ட பிளாக்களை சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு இலவச கொரோனா சுய பரிசோதனைக் கருவிகள் (Covid-19 ART kits) வழங்கப்பட உள்ளது.

இந்த இலவச சுய பரிசோதனை கருவியை குடியிருப்பாளர்கள் இன்று (26-06-2021) முதல் நாளை வரை அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் குழு மையத்தில் (Residents’ Committee Centre) சென்று பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்.!

புக்கிட் மேரா மற்றும் ரெட்ஹில் குடியிருப்பாளர்கள் Covid-19 ART kits கருவியை பெறுவதற்கு தகுதி உள்ளவர்களா என்பதை https://www.gowhere.gov.sg/art என்ற இணையதளம் மூலம் சென்று
தெரிந்துகொள்ளலாம்.

புக்கிட் மேரா மற்றும் ரெட்ஹில் வட்டாரத்தில் கிருமித்தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மேலும், 66 Eng Watt தெருவில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் கட்டாய கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது. அங்கு 13 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா விதிமீறல்: சிங்கப்பூரில் 117 பேருக்கு அபராதம் விதிப்பு.!