COVID-19 பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்.!

new locations covid19 cases
Pic: Google Maps

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Great World City மால், Tampines உள்ள IKEA உள்ளிட்ட இடங்கள் பொது இடங்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இடங்களின் பட்டியல்:

  • ஜூன் 14, 17, 22: IKEA Tampines
  • ஜூன் 20, 22: Hotel 81 Selegie ரோடு
  • ஜூன் 14, 20, 21: Eastpoint Mall கடைத்தொகுதியில் உள்ள NTUC FairPrice கிளை
  • ஜூன் 22: Tiong Bahru Plaza கடைத்தொகுதியில் உள்ள NTUC FairPrice கிளை
  • ஜூன் 23: 19 Serangoon North Avenue 5-ல் உள்ள Sheng Siong பேரங்காடி
  • ஜூன் 24: 166 புக்கிட் மேரா சென்டரலில் உள்ள NTUC FairPrice கிளை
Table: MOH

மேலே குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு சென்று வந்தோர் 14 நாட்கள் தங்கள் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அந்த இடங்களை பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

தொற்று பாதிப்பு உறுதியான நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் தொழுகைக்கு வருவோர்க்கு COVID-19 பரிசோதனை; நடைமுறைக்கு வந்த முன்னோடி திட்டம்.!