கொரோனா விதிமீறல்: சிங்கப்பூரில் 117 பேருக்கு அபராதம் விதிப்பு.!

Singapore public Covid19 violation
Pic: Google Maps

சிங்கப்பூரில் சமூக அளவில் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் குறைந்து வரும் நிலையில், சில கட்டுப்பாடுகள் கடந்த திங்கட்கிழமை (14-06-2021) முதல் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில்  COVID-19 பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதற்காக 117 பேருக்கு தேசிய பூங்கா கழகம் அபராதம் விதித்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிகமானோர் ஒன்றுகூடியது, தீவிர உடற்பயிற்சி செய்யாதபோது முகக்கவசம் அணியாதது போன்ற காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 1800 பேருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஐந்து பேர் கைது.!

சிங்கப்பூரில் இந்த மாதம் 21ம் தேதியிலிருந்து உணவகங்கள் மற்றும் பானக் கடைகள் இரண்டு நபர்கள் குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது.

உணவகங்கள் மற்றும் பானக் கடைகளில் வரும் வாரங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

442, ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் 11 பேர் ஒன்று கூடியிருந்தை கண்டுபிடித்ததாகவும், இதையடுத்து அந்த ஹோட்டலுக்கு 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என்றும் சிங்கப்பூர் பயணத் துறைக்கழகம் கூறியுள்ளது.

மேலும், இன்று (ஜூன் 25) முதல் அடுத்த மாதம் 24ம் தேதி வரை ஹோட்டல் அறைகளுக்குப் பதிவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இனவாதப் பேச்சு: பெண்ணுக்கு நான்கு வார சிறைத்தண்டனை!