சிங்கப்பூரில் பொது நீச்சல் குளங்கள் மற்றும் ஜிம்களுக்கு இலவச அனுமதி..!

Free entry to public swimming pools and gyms
Free entry to public swimming pools and gyms for Singaporeans aged 65 and above (Photo: ActiveSG)

அடுத்த மாதம் முதல், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள், அனைத்து ஆக்டிவ்SG நீச்சல் குளங்கள் மற்றும் ஜிம்களை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்று வெள்ளிக்கிழமை (மார்ச் 6) அறிவிக்கப்பட்டுள்ளது.

“அனைவரும் முழுமையான மற்றும் சுறுசுறுப்பான முறையில் வாழ்க்கை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று கலாச்சார, சமூகம் மற்றும் இளைஞர் கிரேஸ் ஃபூ கூறினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 5 புதிய COVID-19 சம்பவங்கள் உறுதி – MOH..!

மேலும், 2030ஆம் ஆண்டுக்குள், நான்கில் ஒரு சிங்கப்பூரர்கள் 65 வயது நிரம்பியவராக அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருப்பார்கள், அதாவது 900,000 வயதில் மூத்தவர்கள் அப்போது இருப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு மற்றும் உடற்ப்பயிற்சி ஆகியவை வயதில் மூத்தவர்களுக்கு, அவர்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய இயக்கத்தை நீண்ட காலம் தக்கவைக்க அனுமதிக்கிறது.

மேலும் தொடர்ந்து சமூகத்தில் ஈடுபடபாடுடன் இருக்கவும் இவை வழிவகை செய்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்குள் கொரோனா வைரஸ் நுழையும் ஆபத்து அதிகம் – அமைச்சகம் கவலை..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil