சிங்கப்பூரில் மேலும் 5 புதிய COVID-19 சம்பவங்கள் உறுதி – MOH..!

5 new COVID-19 cases in Singapore
5 new COVID-19 cases in Singapore, new cluster at SAFRA Jurong reported (Photo: Mothership)

சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதிக்கப்பட்ட ஐந்து புதிய சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) வியாழக்கிழமை (மார்ச் 5) தெரிவித்துள்ளது.

தற்போதுவரை, சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 117ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் – மனிதவள அமைச்சகம்..!

குணமடைந்தோர் விவரம்

மேலும் இரண்டு நோயாளிகள் (71 மற்றும் 98 சம்பவங்கள்) குணடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

இதன் மூலம் குணடைந்து வீடு திரும்பிய மொத்த நபர்களின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது.

சம்பவம் 113

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 42 வயதான பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆடவர், இவர் சிங்கப்பூர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்.

பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை.

ஆனால் பிப்ரவரி 8 முதல் மார்ச் 3 வரை பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் UK ஆகிய நாடுகளில் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இவர் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் 114

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 62 வயதான சிங்கப்பூர் ஆடவர், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை.

இவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் (NUH) தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் சம்பவம் 115-இன் குடும்ப உறுப்பினர். மேலும் புதிய தொற்று பரவும் இடமாக கண்டறியப்பட்ட, சாஃப்ரா ஜூரோங்கில் உள்ள ஜாய் கார்டன் உணவகத்தில் இவருக்கு தொடர்புள்ளது.

சம்பவம் 115

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 62 வயதான சிங்கப்பூர் பெண், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை.

இவருக்கு மார்ச் 5 காலை அவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது இவர் NUH-இல் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் சம்பவம் 114-இன் குடும்ப உறுப்பினர். மேலும் சாஃப்ரா ஜூரோங்கில் உள்ள ஜாய் கார்டன் உணவகத்தில் இவருக்கும் தொடர்புள்ளது.

சம்பவம் 116

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 50 வயதான சிங்கப்பூர் பெண், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை.

இவருக்கு மார்ச் 5 காலை அவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, தற்போது அவர் NCID-யில் தனிமை அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சாஃப்ரா ஜூரோங்கில் உள்ள ஜாய் கார்டன் உணவகத்தில் இவருக்கும் தொடர்புள்ளது.

சம்பவம் 117

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 52 வயதான சிங்கப்பூர் பெண், அவர் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை.

ஆனால் மார்ச் 1 அன்று மலேசியாவில் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இவர் NCID-யில் தனிமை அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவருக்கும், சாஃப்ரா ஜூரோங்கில் உள்ள ஜாய் கார்டன் உணவகத்தில் தொடர்புள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; பயணக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தும் சிங்கப்பூர்..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil