சிங்கப்பூரில் வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் – மனிதவள அமைச்சகம்..!

MOM Advisory
Employers are advised to inform their work pass holders who are overseas that they may be required to undergo a swab test when they enter or return to Singapore.

கொரோனா வைரஸ் காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் விரிவுபடுத்தியுள்ளது.

ஈரான், வடக்கு இத்தாலி அல்லது தென் கொரியா ஆகிய பகுதிகளுக்கு, 14 நாட்கள் சமீபத்திய பயணம் மேற்கொண்ட புதிய வருகையாளர்கள் சிங்கப்பூருக்குள் நுழையவும் மற்றும் செல்லவும் சிங்கப்பூர் தடை செய்துள்ளது என்று தேசிய மேம்பாட்டுத் துறை அமைச்சர் லாரன்ஸ் வோங் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தெரிவித்தார்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; பயணக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தும் சிங்கப்பூர்..!

இந்த நடவடிக்கை, புதன்கிழமை (மார்ச் 4) முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 14 நாட்களில், சீனா, ஈரான், வட இத்தாலி, கொரியா ஆகியவற்றுக்குச் சென்று வந்த, வேலை அனுமதி அட்டை உடையவர்களுக்கு MOM சில கட்டுப்பாடுகளை வழங்கியுள்ளது.

  • சிங்கப்பூருக்குத் திரும்பும் தனது ஊழியர்களுக்காக, முதலாளிகள் இணையம் வழி அனுமதி பெறவேண்டும்
  • அவர்கள் சிங்கப்பூர் வந்தவுடன், 14 நாட்கள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்

சோதனைச் சாவடிகளில், எச்சில்/சளி மாதிரிகளைக் கொண்டு பரிசோதனை,

  • காய்ச்சல்/சுவாச பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் கொண்ட வேலை அனுமதி அட்டை உடையவர்களுக்கு சோதனைச் சாவடியில் பரிசோதனை செய்யப்படும்.
  • 3 முதல் 6 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படும்
  • கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், சிறப்பு மருத்துவ வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, தவறு செய்யும் முதலாளிகள்/ஊழியர்கள் ஆகியோரின் வேலை அனுமதி அட்டைகளையும், அவற்றுக்குரிய உரிமைகளையும் ரத்து செய்ய மனிதவள அமைச்சகம் தயங்காது, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: go.gov.sg/mom3mar

இதையும் படிங்க : வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் விதிகளை கடுமையாக்கும் சிங்கப்பூர்..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil