சிங்கப்பூருக்குள் கொரோனா வைரஸ் நுழையும் ஆபத்து அதிகம் – அமைச்சகம் கவலை..!

சிங்கப்பூர் புதிய COVID-19 சம்பவங்களை கணிசமாக அதிக எண்ணிக்கையில் எதிர்பார்ப்பதாக, சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் (மார்ச் 5) தெரிவித்துள்ளார்.

உலகளவில், சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே இந்த வைரஸ் தொற்று எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் – மனிதவள அமைச்சகம்..!

மேலும், சிங்கப்பூருக்குள் கொரோனா வைரஸ் நுழையும் ஆபத்து அதிகம் இருப்பதால் இது கவலை அளிக்கிறது என்று கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

ஆகையால், இனி வரும் காலங்களில் கணிசமாக அதிக எண்ணிக்கையிலான புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் தற்போது வரை ஐந்து புதிய கொரோனா சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன, சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 117ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) வியாழக்கிழமை (மார்ச் 5) அன்று தெரிவித்துள்ளது.

மேலும், பயண ஆலோசனைகள் மற்றும் கட்டுப்பாடுகள், வெப்பநிலை பரிசோதனை, தொடர்பு கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிங்கப்பூர் செயல்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 5 புதிய COVID-19 சம்பவங்கள் உறுதி – MOH..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil