இலவச ‘வாய் கொப்பளிக்கும்’ திரவத்தைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

Photo: Temasek Foundation

சிங்கப்பூரில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கியது முதல் இன்று வரை அரசுடன் இணைந்து ‘Temasek Foundation’ பல்ஸ்- ஆக்சி மீட்டர், முகக்கவசங்களை, கிருமிநாசினி உள்ளிட்டவைகளை சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு வீட்டில் உள்ள குடும்பத்திற்கும் இலவசமாக வழங்கியிருந்தது.

சிங்கப்பூர் பிரதமருடன் அமெரிக்க வர்த்தகத்துறைச் செயலாளர் சந்திப்பு!

அதன் தொடர்ச்சியாக, ‘Mouth Gargle’ என்றழைக்கப்படும் வாய் கொப்பளிக்கும் திரவத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக வழங்க முடிவு செய்த ‘Temasek Foundation’, அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது. அதன்படி, இலவச வாய் கொப்பளிக்கும் திரவத்தைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் stayprepared.sg/staywell-register என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும் (அல்லது) +65 9099 6600 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ‘ஹலோ’ என்று அனுப்பியும் பதிவு செய்துக் கொள்ளலாம்.

இதற்கான பதிவு நவம்பர் 15- ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில், டிசம்பர் 10- ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 250 மிலி வாய் கொப்பளிக்கும் திரவம் பாட்டில் மற்றும் 25 மிலி Measuring Cup-யைப் பெற்றுக் கொள்ளலாம்.

சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது!

நிர்ணயிக்கப்பட்ட விநியோக நிலையங்களில் இருந்து வாய் கொப்பளிக்கும் திரவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். விநியோகமானது வரும் நவம்பர் 22- ஆம் தேதி அன்று தொடங்கி டிசம்பர் 12- ஆம் தேதி வரை நீடிக்கும்.

தொண்டை வலி ஏற்படப்போவதாக உணரும்போது அல்லது பொது வாய்வழி சுகாதாரத்திற்காக ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு முறை வாய் கொப்பளிக்கலாம். தொண்டை புண் உண்டாக்கும் கிருமிகளைக் கொல்லும் போவிடோன்-அயோடின் (povidone-iodine) (PVP-I) வாய் கொப்பளிக்கும் திரவம், நோய்களின் பரவலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.