சிங்கப்பூர் பிரதமருடன் அமெரிக்க வர்த்தகத்துறைச் செயலாளர் சந்திப்பு!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

அமெரிக்காவின் வர்த்தகத்துறைச் செயலாளர் ஜினா ரைமொண்டோ (U.S. Secretary of Commerce Gina Raimondo), இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று (16/11/2021) சிங்கப்பூர் வந்தார்.

கிளமென்டி பகுதியில் பூனையை விழுங்கிய மலைப்பாம்பு!

அதைத் தொடர்ந்து, அமெரிக்க வர்த்தகத்துறைச் செயலாளர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் சூழல், கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், டிஜிட்டல் பொருளாதாரம், தொழில்நுட்பம், பிராந்திய உள்கட்டமைப்பு திட்டங்கள், இரு நாடுகளிடையேயான நல்லுறவை மேம்படுத்துவது உள்ளிட்டவைக் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் கூறுகின்றன.

இச்சந்திப்பு குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “இரண்டு நாள் பயணமாக இங்கு வந்துள்ள அமெரிக்க வர்த்தகத்துறைச் செயலாளர் ஜினா ரைமொண்டோவுடன் இன்று நல்ல சந்திப்பு நடைபெற்றது.

கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர் மரணம்

டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரம் மற்றும் விநியோகச் சங்கிலி பின்னடைவு போன்ற துறைகளில் சாத்தியமான ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்தோம். தற்போதைய சிக்கல்களைத் தீர்க்கவும், நமது மக்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் ஆலோசித்தோம்.

இந்த ஆண்டு சிங்கப்பூரும், அமெரிக்காவும் பன்முக இராஜதந்திர உறவுகளின் 55- வது ஆண்டு நிறைவைக் குறித்தன. கோவிட்-19 இருந்தாலும் நமது பொருளாதார உறவுகள் ஆழமடைந்துள்ளன. இது அமெரிக்க-சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் வளர்ச்சி, புதுமைக்கான சமீபத்தில் கையெழுத்திட்ட கூட்டாண்மை ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது!

நாங்கள் படிப்படியாக எல்லைகளைத் திறந்து, மக்களிடையேயான தொடர்பை மீண்டும் தொடங்கும்போது, ​​தொற்றுநோயிலிருந்து பொருளாதார மீட்சியை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் பிரதமரைத் தொடர்ந்து, வர்த்தகத்துறை அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்திக்கும் அமெரிக்க வர்த்தகத்துறைச் செயலாளர், இன்று (17/11/2021) மாலை மலேசியாவிற்கு செல்கிறார்.