கிளமென்டி பகுதியில் பூனையை விழுங்கிய மலைப்பாம்பு!

python-eat-cat-clementi
Facebook

கிளமென்டி பகுதியில் மலைப்பாம்பு ஒன்று பூனையை விழுங்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நவம்பர் 16 அன்று வெளியான ஃபேஸ்புக் பதிவில்; மலைப்பாம்பு சாம்பல் நிற பூனையை விழுங்க அதைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் புகைப்படம் வெளியானது.

கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர் மரணம்

இந்த பூனை சமூகப் பூனையா அல்லது செல்லப் பிராணியா என்பது தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அது தோட்டத்தில் சுற்றித் திரிவதற்கு அனுமதிக்கப்பட்ட செல்லப் பூனையாக இருக்கலாம் என்றும் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த நவம்பர் 13 அன்று பிளாக் 343 கிளெமென்டி அவென்யூ 5இல் நடந்ததாக நம்பப்படுகிறது.

தனிமை இல்லா பயண அனுமதி: இந்திய பயணிகள், ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி

மேலும் அந்த பதிவில் சமீபத்திய புதுப்பிப்பின்படி, மலைப்பாம்பு பிடிபடவில்லை.

சிங்கப்பூரில் மலைப்பாம்புகள் பூனைகளை சாப்பிடுவது புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பயணிகளுக்கு சிங்கப்பூர் அனுமதி… அதற்கான விண்ணப்பங்கள் எப்போது துவங்கும்?