சிங்கப்பூரில் எரிபொருளின் விலைகள் உயர்வு!

Photo: Torque

சிங்கப்பூரில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளது. இதுவரை Shell, CALTEX மற்றும் SPC போன்ற நிறுவனங்கள் எரிபொருளின் விலைகளை ஏற்கனவே உயர்த்தியிருந்தது.

ஓரிரு நாட்களுக்கு முன்பு SINOPEC நிறுவனம் மற்றும் எஸ்ஸோ ESSO நிறுவனமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் 3வது தடவையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்துள்ளது.

கேரளா முதல் சிங்கப்பூர் வரை சைக்கிளில் செல்லும் இளைஞர்!

Shell நிறுவனம் மற்றும் CALTEX நிறுவனத்தின் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டு, டீசல் ஒரு லிட்டருக்கு $S2.18 வெள்ளியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பெட்ரோல் விலையில், Shell நிறுவனத்தின் விலையேற்றம் தொடர்ந்து மிக அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது அந்நிறுவனத்தின் 98 தர வகை பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு $S3.34 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நிறுவனத்தின் 95 தர வகை பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு $S2.65 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று SPC நிறுவனத்தின் 98 தர வகை பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு $S3.06 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட விலையுயர்வு மாற்றங்களுக்கு முன், SPC பெட்ரோல் நிலையங்களின் எரிபாெருள்களின் விலைகள்தான் மிகக் குறைவானதாக இருந்தது.

ஆனால் தற்போது அந்நிறுவனத்தின் 95 தர வகை பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு $S2.58 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நிறுவனத்தின் 92 தர வகை பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு $S2.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பயனீட்டாளர்கள் அமைப்பின், பெட்ரோல் நிலைய விலைகள் கண்காணிப்புத் தளத்தின் மூலம் எரிபொருள்களின் விலையேற்ற புள்ளிவிபரங்கள் பற்றி தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கிடையே கட்டுபாடுகள் தளர்வுகள் பற்றி பேச்சு வார்த்தை!