சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கிடையே கட்டுபாடுகள் தளர்வுகள் பற்றி பேச்சு வார்த்தை!

Photo: Changi Airport

கோவிட்-19 தொற்றுப் பரவலின் காரணமாக பல்வேறு நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வருவதற்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.

சமீபகாலமாக குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் கட்டுபாடுகளில் சில தளர்வுகள் செய்யப்பட்டிருந்தது.

சிங்கப்பூரில் மிகப்பெரிய பேருந்து & ரயில்களுக்கான பராமரிப்பு மையம் விரைவில்…

இதற்கிடையில் மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் அவர்கள், ஜப்பானில் நடைப்பெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் வட்டார கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் வழியாக சென்றுள்ளார்.

அப்போது அமைச்சர் கைரி, சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கை சந்தித்ததாக தெரிவித்தார்.

மேலும், சிங்கப்பூர் மற்றும் மலேசியா மிக நெருக்கமான நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் பயணக் கட்டுபாடுகளைத் தளர்வு செய்வதைப் பற்றி கலந்துரையாடியதாக மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.

கோவிட்-19 தொற்றுப் பரவுதலின் அடிப்படையில் சிங்கப்பூர், உலக நாடுகளை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தொற்று அதிகமானோர் உள்ள நாடுகள் நான்காவது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் மலேசியா நான்காவது பிரிவில் இருந்து வருகிறது. தற்போது மலேசியாவை மூன்றாவது பிரிவுக்கு சிங்கப்பூர் இடம்பெயரத்துள்ளது.

3ஆம் பிரிவில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள், வருகின்ற புதன்கிழமை முதல் 10 நாள் தனிமை உத்தரவை தங்களுடைய இருப்பிடத்திலேயே நிறைவேற்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயண ஏற்பாடுகளில் பல வசதிகளையும் செய்வதற்கு இரு நாட்டின் தரப்புகள் செயல்பட்டு வருவதாக மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 288 பேருக்கு தொற்று