‘CDC’ பற்றுச்சீட்டுகள் திட்டத்தைத் தொடங்கி வைத்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

புதிய சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் (COMMUNITY DEVELOPMENT COUNCIL – ‘CDC Voucher’) திட்டம், 2021- ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. சுமார் 130 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள இந்த திட்டத்தின் மூலம், 1.3 மில்லியன் குடும்பங்களுக்கு பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

“சிங்கப்பூரின் பாதுகாப்பு, நிலைத்தன்மை, வெற்றிக்கான மிகப்பெரிய பொறுப்பை PAP கட்சி தொடர்ந்து சுமந்து வருகிறது” – பிரதமர் லீ

ஒரு பற்றுச்சீட்டின் மதிப்பு 100 சிங்கப்பூர் டாலர் ஆகும். இதனை பயன்படுத்தி சூப்பர்மார்க்கெட் அல்லது மளிகை கடைகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். ‘CDC’ பற்றுச்சீட்டுகளை எப்படி பெறுவது?, அதற்கான வழிமுறைகள் என்ன? பற்றுச்சீட்டுகளை எப்படி பயன்படுத்துவது? உள்ளிட்ட விவரங்களுக்கு https://vouchers.cdc.gov.sg/residents/how-to-claim-cdc-vouchers-tamil என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ‘CDC’ பற்றுச்சீட்டுத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, நேற்று (13/12/2021) ஜூரோங் ஸ்பிரிங் சமூக மன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூரில் வசிக்கும் சிங்கப்பூரர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ‘CDC’ பற்றுச்சீட்டு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Omicron கிருமியை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்: “பூஸ்டர்” தடுப்பூசி முக்கிய பகுதியாக இருக்கும் – பிரதமர் லீ

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “முழு டிஜிட்டல் வடிவிலான ‘CDC’ பற்றுச்சீட்டுத் திட்டத்தை ( CDC Vouchers Scheme) இன்று (13/12/2021) ஜூரோங் ஸ்பிரிங் சமூக மன்றத்தில் (Jurong Spring CC) தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பமும் உணவு (Food), பொருட்கள் மற்றும் சேவைகள் (Goods And Services) போன்ற தினசரி செலவுகளுக்காக 100 சிங்கப்பூர் டாலர் ‘CDC’ பற்றுச்சீட்டுகளைப் பெறுவார்கள். ஏற்கனவே, 2,00,000 குடும்பங்கள் தங்கள் பற்றுச்சீட்டுகளைப் பெற்று கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. பற்றுச்சீட்டுகள் பற்றி மேலும் அறிய, https://vouchers.cdc.gov.sg/residents/info என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.

இந்தத் திட்டம், கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வீட்டு உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாகும் (Household Support Package). இந்த தொற்றுநோய்களின் போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹார்ட்லேண்ட் கடைகள் (Heartland Shops) மற்றும் வியாபாரிகளுக்கும் (Hawkers) இது உதவும். உங்கள் கைப்பேசியைப் பயன்படுத்திப் பற்றுச்சீட்டுகளைச் சேகரித்துப் பயன்படுத்தலாம்.

உங்களுக்கான ‘CDC’ பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது எப்படி?

இந்த இக்கட்டான காலகட்டத்தில் உங்களின் ஒற்றுமைக்கும், ஆதரவிற்கும் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

பற்றுச்சீட்டு திட்டத்தைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக, பழ விற்பனை கடைக்கு சென்று துரியன் பழங்களை (Durians Fruit) வாங்கிக் கொண்டு, அதற்கான பணத்தை ‘CDC’ பற்றுச்சீட்டு மூலம் பிரதமர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பற்றுச்சீட்டுகள் 31 டிசம்பர் 2022 வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.