ஜி20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக இந்தோனேசியா சென்றுள்ள அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter Page

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக இன்று (07/07/2022) இந்தோனேசியா நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

ஊழியர்களுக்கு இந்த ஆதரவு கண்டிப்பாக வேண்டும் – 3 முக்கிய அம்சங்கள்

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சூடியின் (Indonesian Minister for Foreign Affairs Retno Marsudi) அழைப்பின் பேரில், ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக, இன்று (07/07/2022) மற்றும் நாளை (08/07/2022) இந்தோனேசியாவின் பாலி நகருக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) 30 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உறுப்பினர்களை உள்ளடக்கிய உலகளாவிய ஆளுகை குழுவின் ஒருங்கிணைப்பாளராக சிங்கப்பூர் அழைக்கப்பட்டுள்ளது. ஜி20 மற்றும் ஐ.நா. உறுப்பினர்களுக்கு இடையே பரந்த அதிக உரையாடலை எளிதாக்க முயல்கிறது.

OCBC வங்கியில் மோசடியில் பங்களிப்பை ஒப்புக்கொண்ட முதல் ஆடவருக்கு தண்டனை!

இந்த கூட்டத்தில் பணவீக்கம், எரிசக்தி பாதுகாப்பு, உணவு, சரக்கு இறக்குமதி, பொருளாதாரம், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்க உள்ளனர். இந்த ஜி20 கூட்டத்தின் போது, மற்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசவிருக்கிறார் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன். சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகளும் பாலி சென்றுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.