பல்வேறு நாடுகளின் அமைச்சர்களைச் சந்தித்த சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங்!

Photo: Singapore Finance Minister Lawrence Wong Official Facebook Page

இத்தாலி நாட்டின் தலைநகர் ரோமில் G20 உறுப்பு நாடுகளின் (Group of 20- ‘G20’ Summit in Rome) இரண்டு நாள் உச்சி மாநாடு இன்று (30/10/2021) தொடங்கியது. இந்த மாநாட்டில் G20- ல் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென் கொரியா, துருக்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இந்தோனேசியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாடு மட்டுமின்றி G20 நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலானக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றது.

சிங்கப்பூரில் மேலும் 4,248 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பின் பேரில், இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக் கொண்டார். பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் மற்றும் முக்கிய அதிகாரிகளும் இத்தாலி சென்றுள்ள நிலையில், அங்கு பல்வேறு நாடுகளின் அமைச்சர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அந்த வகையில், ரோம் நகரில் சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று (30/10/2021) இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ்கோயல், இந்திய நிதியமைச்சர் நிர்லா சீதாராமன், புரூணை நிதி மற்றும் பொருளாதாரம் துறை அமைச்சர் டத்தோ அமின் லியூ (Brunei’s Minister of Finance and Economy II Dato Amin Liew) , நெதர்லாந்து நிதியமைச்சர் வொப்கே ஹோக்ஸ்ட்ரா (Netherlands Finance Minister Wopke Hoekstra) ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசினார். இந்த தகவலை சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளியையொட்டி பேருந்துகள், ரயில்களுக்கு வண்ணமிகு அலங்காரம்!

G20 உச்சி மாநாட்டில் கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், பொருளாதாரம், சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சனை உள்ளிட்டவைக் குறித்து தலைவர்கள் ஆலோசிக்கின்றன. மேலும், தனித்தனியே தலைவர்களின் சந்திப்பும் நடைபெற உள்ளது.