சிங்கப்பூரில் மேலும் 4,248 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

racist-passenger-india-Singapore
Pic: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (29/10/2021) வெளியிட்டிருந்த அறிக்கையில், “சிங்கப்பூரில் நேற்று (29/10/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 4,248 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 4,246 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 3,710 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 536 பேருக்கும், வெளிநாட்டு பயணிகள் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,92,099 ஆக உயர்ந்தது.

தீபாவளியையொட்டி பேருந்துகள், ரயில்களுக்கு வண்ணமிகு அலங்காரம்!

கொரோனா பாதிப்பால் மேலும் 16 பேர் உயிரிழந்தனர். சிங்கப்பூரில் கொரோனா உயிரிழப்பு 380 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 1,614 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 257 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 139 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றன.

லிட்டில் இந்தியாவில் தீபாவளி விற்பனை மந்தம்; கூட்டம் அதிகம் இல்லை – கடைக்காரர்கள் கவலை

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.