தீபாவளியையொட்டி பேருந்துகள், ரயில்களுக்கு வண்ணமிகு அலங்காரம்!

Photo: Minister S.Iswaran Official Facebook Page

வரும் நவம்பர் 4- ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சிங்கப்பூரில் அதற்கான கொண்டாட்டங்கள் முன்கூட்டியே களைக்கட்டியுள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் லிட்டில் இந்தியா உள்ளிட்ட கடை வீதிகளில் வியாபாரம் அதிகரித்துள்ளதால், கடைகளின் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

Work permit அனுமதி பெற்ற இந்திய ஊழியருக்கு ஒன்பது வார சிறைத்தண்டனை

எனினும், அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் கடை வீதிகளுக்கு சென்று பொருட்களை வாங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, ‘Lisha’ என்ற அமைப்பு தீபாவளியை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், நிகழ்ச்சிகள் அனைத்தும் பொதுமக்கள் வீட்டிலிருந்தபடி, பாதுகாப்பாக காணும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

G20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்ற பிரதமர் லீ சியன் லூங்!

தீபாவளியையொட்டி, சிங்கப்பூரில் உள்ள முக்கிய சாலைகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதன்தொடர்ச்சியாக, பேருந்துகள், ரயில்கள் வண்ணமிகு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

தீபாவளிக்காக ரயில்களில் செய்யப்பட்டுள்ள அலங்காரங்களை நேரில் பார்வையிட்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “தீபாவளி பண்டிகைகாக ரயில்கள், பேருந்துகள், ரயில் நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையங்களின் அலங்காரங்களை உங்களில் சிலர் கவனித்திருப்பீர்கள்.

சுபாஷ் சந்திரபோஸும் சிங்கப்பூரும்!

வருடாந்திர பாரம்பரியத்தைத் தொடர்ந்து, லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் பாரம்பரிய சங்கம் (Lisha) நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது. ரயில் மற்றும் பேருந்துகளில் வண்ணமிகு ரங்கோலி கோலங்கள், மயில்கள், பாரம்பரிய விளக்குகள் போன்ற வரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மயில்கள் அழகு, பெருமை மற்றும் செம்மை ஆகியவற்றைக் குறிக்கிறது.

தொற்றுநோய்களுக்கு மத்தியில் தீபாவளியைக் கொண்டாடுவது இது இரண்டாவது ஆண்டாகும். விழாக்களுக்கு மத்தியில், பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க நினைவில் கொள்ளுங்கள், மேலும் நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாம் அனைவரும் தொடர்ந்து செயல்படுவோம்.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிங்கப்பூர் நிதியமைச்சருடன் சந்திப்பு!

லிட்டில் இந்தியாவிலுள்ள சில வணிகங்கள், அதிக நேரம் இல்லாத காலங்களில் ஷாப்பிங் செய்யும் வகையில், தங்கள் இயக்க நேரத்தை நீட்டித்துள்ளன. சில கடைகளுக்கு ஆன்லைன் விருப்பமும் உள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் வீட்டில் மகிழ்வதற்காக சில சுவாரஸ்யமான ஆன்லைன் செயல்பாடுகளையும் (https://deepavalisg.com) ‘Lisha’ தொகுத்துள்ளது. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.