G20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்ற பிரதமர் லீ சியன் லூங்!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

இத்தாலி நாட்டின் தலைநகர் ரோமில் G20 உறுப்பு நாடுகளின் (Group of 20- ‘G20’ Summit in Rome) உச்சி மாநாடு அக்டோபர் 30 மற்றும் அக்டோபர் 31 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, G20- ல் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென் கொரியா, துருக்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இந்தோனேசியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரோம் நகருக்கு சென்றுள்ளனர்.

போக்குவரத்து காவலரை மோதிவிட்டு தப்பிய இருவர் கைது – (காணொளி)

அந்த வகையில், இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பின் பேரில், சிங்கப்பூரில் இருந்து தனி விமானம் மூலம் G20 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இத்தாலி சென்றுள்ளார். பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் மற்றும் முக்கிய அதிகாரிகளும் இத்தாலி சென்றுள்ளனர். நவம்பர் 1- ஆம் தேதி வரை இத்தாலி நாட்டில் நடைபெறும் பல்வேறு கூட்டங்களிலும் பிரதமர் கலந்துக் கொள்கிறார். இவ்வாறு சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

G20 உச்சி மாநாட்டில் கொரோனா பெருந்தொற்று, கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், பொருளாதாரம், பருவநிலை மாற்றம், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவைக் குறித்து தலைவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 38 நபர்கள் உணவு நிலையங்களில் பிடிபட்டனர்

G20 உறுப்பு நாடுகளின் தலைவர்களைத் தனித்தனியே சந்திக்கவிருக்கும், பிரதமர் லீ சியன் லூங் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகியின் அழைப்பின் பேரில் இந்த வார இறுதியில் G20 Italy மாநாட்டில் கலந்துகொள்ள ரோம் வந்துள்ளேன். சிங்கப்பூர் G20 நாடுகளின் உறுப்பினர் அல்ல. ஆனால், நாம் மீண்டும் ஒரு விருந்தினர் நாடாக அழைக்கப்பட்டுள்ளோம். கடந்த ஆண்டின் மெய்நிகர் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் உச்சிமாநாடு நேரடி அமர்வில் நடைபெறுகிறது. மற்ற தலைவர்களை சந்திக்கக் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Work permit அனுமதி பெற்ற இந்திய ஊழியருக்கு ஒன்பது வார சிறைத்தண்டனை

G20 உச்சி மாநாடு கடந்த 2020- ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் காணொளி மூலம் நடைபெற்ற நிலையில், தற்போது, இந்த மாநாட்டை இத்தாலி தலைமை ஏற்று நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர்களின் வருகையால் ரோம் நகர் முழுவதும் காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.