முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 38 நபர்கள் உணவு நிலையங்களில் பிடிபட்டனர்

Photo credit: Nuria Ling/TODAY

முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள், உணவங்காடி நிலையங்களில் உணவருந்தியபோது பிடிபட்டனர்.

கடந்த அக்டோபர் 20 மற்றும் அக்டோபர் 26க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவர்கள் சிக்கினர்.

போக்குவரத்து காவலரை மோதிவிட்டு தப்பிய இருவர் கைது – (காணொளி)

உணவருந்துபவர்களின் விவரங்கள் வாங்கிக்கொள்ளப்பட்டது, ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் அபராதம் பற்றி விரிவாக குறிப்பிடவில்லை. இதனை தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) வியாழக்கிழமை (அக். 28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அக்டோபர் 13 முதல், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே உணவங்காடி நிலையங்கள் மற்றும் காபி கடைகளில் உணவருந்த அனுமதிக்கப்படுவர்.

முதல் டோஸ் போட்டுக்கொண்ட அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், அங்கு உணவுகளை பார்சல் மட்டுமே வாங்கி செல்ல முடியும்.

“நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பதில் நாம் அனைவருக்கும் பங்கு உள்ளது.”

“நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், உணவருந்துவதற்குப் பதிலாக உணவை பார்சல் வாங்கி செல்லுங்கள்” என்று NEA கூறியுள்ளது.

இந்திய ஊழியர்களை பெரிதும் சார்ந்துள்ள நிறுவனங்கள் – கட்டுப்பாடுகள் தளர்வுக்கு மகிழ்ச்சி