காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மரியாதை!

காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மரியாதை!
Photo: PM Narendra Modi

 

 

18- வது ஜி20 உச்சி மாநாடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உள்ள ‘பிரகதி மைதானத்தில்’ அமைந்துள்ள ‘பாரத் மண்டபத்தில்’ நேற்று (செப்.09) தொடங்கி இன்று (செப்.10) வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ரஷ்யா, சீனா, கனடா, தென் ஆப்ரிக்கா, சவூதி அரேபியா, ஜெர்மனி, இந்தோனேசியா உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும், அமைச்சர்களும், உலக சுகாதார நிறுவனம், சர்வதேச நிதியம், ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மேற்கூரையை சுத்தம் செய்யும் வெளிநாட்டு பணிப்பெண்.. “சொல்லும் வேலை ஒன்னு.. செய்யும் வேலை ஒன்னு”

மாநாட்டின் முதல் நாளில் பருவநிலை மாற்றம், சுகாதாரக் கட்டமைப்பு, வர்த்தகம், பயங்கரவாத ஒழிப்பு, உக்ரைன் போர் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டு, கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று (செப்.10) காலை 09.00 மணிக்கு டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்திய பிரதமரை நேரில் சந்தித்துப் பேசிய பிரதமர் லீ சியன் லூங்!

முன்னதாக, ராஜ்காட்டிற்கு வருகைத் தந்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, சால்வை அணிவித்து வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.