இந்திய பிரதமரை நேரில் சந்தித்துப் பேசிய பிரதமர் லீ சியன் லூங்!

Photo: Singapore in India

 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள ‘பாரத் மண்டபத்தில்’ இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 18வது ஜி20 உச்சி மாநாடு நேற்று (செப்.09) காலை 10.00 மணிக்கு தொடங்கியது.

மேற்கூரையை சுத்தம் செய்யும் வெளிநாட்டு பணிப்பெண்.. “சொல்லும் வேலை ஒன்னு.. செய்யும் வேலை ஒன்னு”

ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா, பிரேசில், சீனா, ரஷ்யா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஆப்பிரிக்கா நாடுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, வங்கதேசம், சவூதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள், உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், பிரதமர் அலுவலகத்துறை அமைச்சர் இந்திராணி ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அவர்களுடன் சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம், வெளியுறவுத்துறை உள்ளிட்ட அமைச்சகங்களின் அதிகாரிகளும் டெல்லிக்கு சென்றுள்ளனர்,

இந்திய ஊழியர்களே இந்த நாடுகளுக்கு நீங்கள் செல்ல விசா தேவையில்லை – புதிய விதிமுறை

மாநாட்டிற்கு இடையே ஜி20 உச்சி மாநாடு நடைபெற்ற அரங்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேரில் சந்தித்துப் பேசினார். இது குறித்து இந்தி பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உடன் உரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவும், சிங்கப்பூரும் நமது மக்களின் முன்னேற்றத்திற்காக இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து ஆழப்படுத்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று நாள் அரசுமுறை இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் பிரதமர் இன்று (செப்.10) மாலை தாயகம் திரும்புகிறார்.