‘Gateway Drive’ அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

Photo: Singapore Civil Defence Force Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள எண் 6 கேட்வே டிரைவில் (No.6 Gateway Drive) உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (18/12/2021) பிற்பகல் 01.55 PM மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (Singapore Civil Defence Force- ‘SCDF’) மற்றும் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

ஊதியக் கடன் திட்டத்தின் அடுத்த தவணையை மார்ச் மாதத்தில் முதலாளிகள் எதிர்பார்க்கலாம்

இதையடுத்து, தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு வீரர்கள், அடுக்குமாடி குடியிருப்பின் 9 வது மாடியில் (9th Floor) உள்ள வீட்டின் அறையில் இருந்து புகை வருவதைக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, சுவாசக் கருவி செட்டை அணிந்துக் கொண்டு, தீ விபத்துக்கு ஏற்பட்ட வீட்டின் படுக்கையறைக்கு (Bedroom) சென்ற வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும், அறையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது.

புகையை சுவாசித்த நபரை தீயணைப்பு வீரர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (Singapore General Hospital for Smoke Inhalation) அனுப்பி வைத்தனர்.

சர்வதேச புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தினம்- முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ள என்.டி.யூ.சியின் பொதுச்செயலாளர்!

இதனிடையே, சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னதாக, ஒரு பாதுகாப்பு பணியாளர் ஹோஸரீலை (Hosereel) பயன்படுத்தித் தீயை அணைத்தார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் எரிந்துக் கொண்டிருந்த மெழுகுவர்த்தியைக் கவனிக்காமல் இருந்துள்ளனர். இதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக 271 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

மெழுகுவர்த்தியை அணைத்த பின் அதை மறக்காமல் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று பொதுமக்களை சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை அறிவுறுத்தியுள்ளது.