சர்வதேச புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தினம்- முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ள என்.டி.யூ.சியின் பொதுச்செயலாளர்!

Photo: NTUC Ng Chee Meng

சர்வதேச புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தினம் (International Migrant Workers Day) இன்று (19/12/2021) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்துள்ளனர்.

10 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை! சிங்கப்பூர் லாட்டரி குறித்து கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை!

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான காப்பீடு திட்டம் குறித்த அறிவிப்பை, என்.டி.யூ.சியின் பொதுச்செயலாளர் இங் சீ மெங் (Secretary General – NTUC Ng Chee Meng) இன்று (19/12/2021) இரவு 07.30 PM நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அறிவிக்கவுள்ளார்.

அவரது உரையில் இடம் பெறபோகும் அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சிங்கப்பூரில் புதிதாக 271 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வசிக்கும் போதும், பணிபுரியும் போதும் எவ்வாறு சிறப்பாகப் பாதுகாக்கப்படுவார்கள் என்பது குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார். கொரோனா பெருந்தொற்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றியிருந்தாலும், நமது புலம்பெயர்ந்த சமூகத்தின் முக்கியத்துவத்தையும், அவர்களின் நல்வாழ்வையும் மறக்க முடியாது.

அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் புலம்பெயர்ந்த ஊழியர் நிலையத்தின் ஒரு இணை உறுப்பினரை எவ்வாறு உருவாக்கியது என்பதை இங் சீ மெங் அறிவிப்பார். இந்த உறுப்பினர் பலன்களில் தீவிர நோய்கள் மற்றும் இறப்புக்கான 10,000 சிங்கப்பூர் டாலர் குழு காப்பீடு அடங்கும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது.

இரண்டாவது முறையாக காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடித்தது காவல்துறை!

இந்த உறுப்பினர் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி மற்றும் மேம்படுத்தும் வாய்ப்புகள் மற்றும் குறிப்பாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு முகவர் சேவைகளை எவ்வாறு பெற முடியும் உள்ளிட்டவைக் குறித்து பேசவிருக்கிருக்கிறார்.