GE2020: வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் திரு. எஸ் ஈஸ்வரன் வழிநடத்திய மக்கள் செயல் கட்சி (PAP) குழு வெற்றி..!

GE2020: PAP wins West Coast GRC with 51.69% of votes against Tan Cheng Bock’s team
GE2020: PAP wins West Coast GRC with 51.69% of votes against Tan Cheng Bock’s team (Photo: Ili Nadhirah Mansor/TODAY)

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில், திரு எஸ் ஈஸ்வரன் வழிநடத்திய மக்கள் செயல் கட்சி (PAP) குழு, அவர்களை எதிர்த்து போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (PSP) டாக்டர் டான் செங் போக் மற்றும் அவரது அணியை தோற்கடித்தது.

இதில் 51.69 சதவீத வாக்குகளுடன் ஐந்து இடங்களை PAP கைப்பற்றியது, அதே சமயத்தில் PSP 48.31 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : GE2020: 61.24% வாக்குகளுடன் அமோக வெற்றி; ஆட்சி அமைக்கும் மக்கள் செயல் கட்சி..!

சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறை அமைச்சர் டெஸ்மண்ட் லீ, திருமதி ஃபூ மீ ஹார், திரு ஆங் வீ நெங் (Ang Wei Neng) மற்றும் புது முகம் திருமதி ரேச்சல் ஓங் (Rachel Ong) ஆகியோர் அடங்கிய குழுவை தொடர்பு மற்றும் தகவல் அமைச்சராக இருக்கும் திரு ஈஸ்வரன் வழிநடத்தினார்.

இதில் திரு டெஸ்மண்ட் லீ மற்றும் திரு ஆங் ஆகியோர் ஜுராங் ஜி.ஆர்.சி (Jurong GRC) நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

West Coastல் கடுமையான போட்டி எதிர்பார்க்கப்பட்டது, ஏனெனில் முன்னாள் PAP MP. டாக்டர் டான், PSPயை உருவாக்கிய பின்னர் இந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திரு.ஈஸ்வரன்; மக்களின் ஆதரவுக்கு நன்றியை கூறினார். அதே சமயம் வாக்காளர்களில் ஒரு பகுதியினர் தங்களுக்கு வாக்களிக்கவில்லை, என்றார்.

அதற்கான காரணம். எவ்வாறு கவலைகளைத் தீர்க்க முடியும், கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும் என்று ஆராய்ந்து, அதற்கு ஏற்றார்போல் பணிபுரிவோம்,
என்றார் திரு .ஈஸ்வரன்.

இதையும் படிங்க : COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த மேலும் சுமார் 30 இடங்களின் பட்டியல்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg