“லாவெண்டரில் உள்ள ‘Muted Gelato’ பானக்கடை நள்ளிரவு வரை திறந்திருக்கும்” என அறிவிப்பு!

"லாவெண்டரில் உள்ள 'Muted Gelato' பானக்கடை நள்ளிரவு வரை திறந்திருக்கும்" என அறிவிப்பு!
Photo: Muted Gelato

 

கடந்த 2023- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரின் லாவெண்டர் தெருவில் (Lavender Street) ‘Muted Gelato’ என்ற நிறுவனம் பானக்கடையைத் திறந்துள்ளது. அந்த கடையில் சுமார் 20 பேர் வரை அமர்ந்து பானங்களைப் பருகும் வகையில் இட வசதி உள்ளது.

வேலைக்கு எடுத்த வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடத்தை சோதிக்காத முதலாளிகள் 123 பேர் கைது

‘Muted Gelato’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 15 வகையான பானங்களை விற்பனை செய்து வருகிறது. அத்துடன் விதவிதமான ஐஸ்கிரீம்களையும் விற்பனை செய்து வருகிறது. 4 வெள்ளி முதல் இந்த கடையில் பானங்கள் கிடைக்கும். குறிப்பாக, Hokkaido vanilla, Uji matcha, Hokkaido cookies, Roasted hojicha, Evergreen sorbet, Soy gula melaka, Dark chocolate sorbet, Sicilian pistachio, Earl grey sakura, Lychee sorbet ஆகிய வகையான பானங்கள் இங்கு கிடைக்கும்.

மது போதையில் இருக்கும் பெண்களிடம் உறவு கொண்டு படம்பிடித்த ஆடவர் – சிறை, பிரம்படிகள் விதிப்பு

‘Buttermilk Waffles’ ஐஸ்கிரீம் உடன் சேர்த்து அல்லது சேர்க்காமல் 6 வெள்ளிக்கு வழங்கப்படும். இந்த நிலையில், ‘Muted Gelato’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “லாவெண்டரில் உள்ள தங்கள் நிறுவனத்தின் கடை நண்பகல் 12.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை திறந்திருக்கும். எனவே, நள்ளிரவிலும் வாடிக்கையாளர்களுக்கு பானங்கள் விற்பனை செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.