புதிய பயணத் திட்டம்: ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூர் வந்த முதல் விமானம்!

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதேபோல், தொழிலாளர்களும் வழக்கம்போல் தங்களது பணிகளை செய்து வருகின்றன.

சிங்கப்பூரில், 8 மணிநேரம் தூங்குவதற்கு S$1,500 சம்பளம் – வேலை ரெடி!!

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் சிங்கப்பூர் வருவதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் இந்த நடைமுறைப் பொருந்தும். இவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. இருப்பினும், இவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது.

அந்த வகையில், ஜெர்மனி நாட்டின் புகழ் பெற்ற பிராங்க்ஃபர்ட்டிலிருந்து (Frankfurt) விமான நிலையத்தில் இருந்து 100 பயணிகளுடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான SQ325 ரக விமானம் நேற்று (08/09/2021) மாலை 05.41 PM மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

கொரோனா தடுப்பூசிப் போட்டோருக்கான புதிய பயண திட்டத்தின் (Vaccinated Travel Lane- ‘VTL’) கீழ் ஜெர்மனியில் இருந்து வந்த இந்த பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்ற போதிலும், அவர்களுக்கு அதிகபட்சம் நான்கு முறை கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்!

இந்த பயணத் திட்டத்தின் கீழ் ஜெர்மனியில் இருந்து 1,400- க்கும் மேற்பட்ட பயணிகளுக்கும், புரூனேவிலிருந்து 50- க்கும் மேற்பட்ட பயணிகளுக்கும் சிங்கப்பூர் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த பயணத் திட்டத்தின் கீழ் விமான டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் கூறியுள்ளது.

வரும் நாட்களில் சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.