கெய்லாங் பஹ்ருவில் உள்ள நடன ஸ்டுடியோவில் தீ விபத்து

fire accident
(Photo: Facebook/Singapore Civil Defence Force)

கெய்லாங் பஹ்ருவில் உள்ள ஜலான் பெசார் டவுன் கவுன்சிலுக்கு அடுத்துள்ள ஒரு நடன ஸ்டுடியோவில் இன்று (ஜூலை 28) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

காலை 6.35 மணியளவில் 70A கெய்லாங் பஹ்ருவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

‘Work Pass’-யைப் பெறுவதற்கு தவறான கல்வித் தகுதியை சமர்ப்பித்த இந்தியர்களுக்கு சிறை!

இரண்டாவது மாடியில் தீ நன்கு பற்றி எரிந்ததாக SCDF பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. இந்த தீ நடன ஸ்டுடியோவின் உள்ளே ஏற்பட்டது.

தீயை கட்டுக்குள் கொண்டுவர, சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 அவசர வாகனங்கள் அங்கு அனுப்பப்பட்டன.

டவுன் கவுன்சிலின் முக்கிய அலுவலகம் இன்று தற்காலிகமாக மூடப்படும் என்று அது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ₹7½ லட்சம் பணம் மோசடி