‘Work Pass’-யைப் பெறுவதற்கு தவறான கல்வித் தகுதியை சமர்ப்பித்த இந்தியர்களுக்கு சிறை!

Photo: Ministry Of Manpower

 

சிங்கப்பூரில் ‘Work Pass’ பெறுவதற்கான விண்ணப்பங்களில் தவறான கல்வித் தகுதியைச் சமர்ப்பித்ததற்காக இரண்டு இந்தியர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் நேற்று (27/07/2021) சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் பெயில்வால் சுனில் தத் (Bailwal Sunil Dutt) என்ற இந்தியருக்கு ஒரு வாரம் சிறைத்தண்டனையும், சூத்ரதர் ​​பிஜோய் (Sutradhar Bijoy) என்ற மற்றொரு இந்தியருக்கு நான்கு வாரங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மனிதவள அமைச்சகம் (Ministry Of Manpower) கூறுகையில், “அவர்களின் ‘Work Pass’ ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் சிங்கப்பூரில் பணிப்புரிய நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

‘மின்சார வாகனங்களின் பதிவு 1.3 சதவீதமாக உயர்வு’!

இதேபோல், ‘Work Pass’ வைத்திருந்த மற்றொரு இந்தியரான பண்டாரே ராகவேந்திராவும் (Bhandare Raghavendra), இதே குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதம் 5- ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இந்த மூன்று பேரும் இந்திய மனவ் பாரதி பல்கலைக்கழகத்தில் (Manav Bharti University- ‘MBU’) படித்து பட்டம் பெற்றதாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்ததாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றத்திற்காக விசாரிக்கப்பட்ட 23 வெளிநாட்டவர்களில் அவர்களும் அடங்குவர். மீதமுள்ள 20 நபர்களில், 19 பேருக்கு எதிர்காலத்தில் சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தரமாகத் தடை (Permanently Barred From Future Employment in Singapore) விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒருவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

“புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடையே தடுப்பூசி விகிதம் மிகவும் அதிகம்”- நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

மனிதவள அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் (Ministry Of Manpower Spoke Person) கூறுகையில், “தகுதிகள் குறித்து விசாரணை நடத்திய போது இந்திய மனவ் பாரதி பல்கலைக்கழகம் (Manav Bharti University- ‘MBU’) போன்ற நிறுவனங்களைக் கண்டறிவது கடினம். அவை வெளிநாட்டு அரசாங்கத்தின் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு, உண்மையான பட்டங்களை வழங்கும் போது, விற்கப்படும் போலி பட்டங்களை கண்டுபிடிப்பது கடினம். ஆயினும் கூட, ‘Work Pass’ கட்டமைப்பின் ஒருமைப்பாட்டைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மனிதவள அமைச்சகம் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து பலப்படுத்துகிறது. குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

“கடந்த ஐந்து ஆண்டுகளில், ‘Work Pass’ விண்ணப்பங்களில் போலி கல்வித் தகுதிகளைச் சமர்ப்பித்ததற்காக சிங்கப்பூரில் பணியாற்றுவதிலிருந்து ஒரு வருடத்திற்கு சராசரியாக 660 வெளிநாட்டினரை அமைச்சகம் கண்டறிந்து நிரந்தரமாகத் தடை விதித்துள்ளது. அதே காலகட்டத்தில், ஆண்டுக்கு சராசரியாக எட்டு வெளிநாட்டவர்கள் இத்தகைய குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டனர். சாத்தியமான தொழிலாளர்களால் வழங்கப்படும் தகுதிகள் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்த முதலாளிகளுக்கு முன்னுரிமை உள்ளது.பணியமர்த்துவதற்கு முன், முதலாளிகள் ஏற்கனவே தொழிலாளர்களை மதிப்பீடு செய்திருக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பித்த பதவிக்கு சரியான திறன்களும், தகுதியும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சிறையில் உள்ள இரு இந்தியர்களில் ஒருவர் சமையல் கலைஞராகவும் (Cooking Master), மற்றொரு இந்தியர் உதவி கிடங்கு மேலாளராகவும் (Assistant Warehouse Manager) சிங்கப்பூரில் பணிப் புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.