கெயிலாங் செராய் சந்தை தீபாவளிக்கு முந்தைய 3 நாட்களுக்கு மூடல்

Google Maps

தீபாவளிக்கு முன்னதாக, நவ. 1 திங்கள் முதல் நவ. 3 புதன்கிழமை வரை மூன்று நாட்களுக்கு கெயிலாங் செராய் மார்க்கெட் மூடப்பட்டுள்ளது.

கடந்த ஏழு நாட்களில் அங்கு கோவிட்-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியா சென்ற விடுதி வெளிநாட்டு ஊழியர்கள் – கோவில்களில் பிராத்தனை

சந்தையில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் மற்ற ஊழியர்களிடையே கோவிட்-19 பாதிப்புகள் ஏற்பட்டதாக, தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) ஞாயிற்றுக்கிழமை அறிக்கையில் தெரிவித்தது.

மேலும், பசார் கெய்லாங் செராய் வர்த்தக சங்கத்துடன் கலந்தாலோசித்த பிறகு இந்த மூடல் செயல்படுத்தப்பட்டது என NEA கூறியது.

அது சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்ய மூடப்பட்டுள்ளது.

பரபரப்பான சந்தை பொருத்தமற்ற நேரத்தில் மூடப்பட்டதால், சனிக்கிழமை பிற்பகல் முதல் சமூக ஊடகங்களில் மூடல் பற்றிய வதந்திகள் பரவின.

தீபாவளிக்கு முந்தைய மூன்று நாட்கள் வழக்கமாக கடை வைத்திருப்பவர்களுக்கு உச்ச விற்பனை காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி-சிங்கப்பூருக்கு இடையே செல்ல வேண்டுமா? சமீபத்திய விமான அப்டேட்