சிங்கப்பூரில் இளைஞர் ஒருவருக்கு வெட்டு…சந்தேக நபர் கைது!

Singapore tamil news

இந்த வார தொடக்கத்தில் கெய்லாங்கில், 25 வயதான ஆடவர் ஒருவரை வெட்டிய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை இன்று (ஜன. 8) தெரிவித்துள்ளது.

இதில் 36 வயதான சந்தேகநபர் மீது தானாக முன்வந்து ஆபத்தான ஆயுதத்தால் காயப்படுத்தியதாக இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக 23 பேருக்குக் கிருமித்தொற்று – சமூக அளவில் இருவர் பாதிப்பு!

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணியளவில் கெய்லாங் சாலையில் அடையாளம் தெரியாத ஆடவரால் ஒருவர் வெட்டப்பட்டது குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, பாதிக்கப்பட்டவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, பெடோக் காவல் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தரை விசாரணைகள் மற்றும் கேமரா காட்சிகளைப் பயன்படுத்தி சந்தேக நபரின் அடையாளத்தை கண்டறிந்து, பின்னர் கைது செய்தனர்.

ஆபத்தான ஆயுதத்தால் தானாக முன்வந்து வேண்டுமென்றே காயப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி விதிக்கப்படலாம் அல்லது அத்தகைய தண்டனைகள் கலவையாகவும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூர் அமைச்சரவையில் முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் திரு. லீ!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…