சிங்கப்பூர் அமைச்சரவையில் முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் திரு. லீ!

Singapore 70% population vaccinated
Pic: MCI

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தனது முதல் கோவிட் -19 தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

68 வயதான திரு லீ, சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் இன்று (ஜனவரி 8) காலை மருத்துவ சேவைகள் இயக்குநர் கென்னத் மாக் (Kenneth Mak) உடன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரில் இந்து கோவில் உட்பட தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்கள்

கடந்த டிசம்பர் 31, 2020 அன்று தடுப்பூசி போடப்பட்ட 40 NCID ஊழியர்களை தொடர்ந்து பிரதமர் திரு லீ தனது தடுப்பூசியை போட்டுக்கொண்டார் .

அமைச்சரவை உறுப்பினர்களில் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட முதல் உறுப்பினர் பிரதமர் லீ என்பது குறிப்பிடத்தக்கது.

(PHOTO: MCI)

இதனால் வலி ஏதும் ஏற்படவில்லை என்றும், இது பயனுள்ளதாகவும், மேலும் முக்கியமானதாகவும் உள்ளதாக திரு லீ தடுப்பூசியை போட்டுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், சிங்கப்பூரர்களும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் இதுவரை இந்த தடுப்பூசி காரணமாக எந்தவித கடுமையான பக்க விளைவுகள் அல்லது எதிர்வினைகள் எதுவும் பதிவாகவில்லை.

ஆடவருடன் குளியலறை டிக்டாக் காணொளி…வீட்டுப் பணிப்பெண் கைது

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…