புதிதாக 23 பேருக்குக் கிருமித்தொற்று – சமூக அளவில் இருவர் பாதிப்பு!

Singapore reports COVID-19
(PHOTO: TODAY)

சிங்கப்பூரில் இன்றைய (ஜன.8) நிலவரப்படி, புதிதாக 23 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

இதில் மேலும் இரண்டு பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் முன்னதாக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் அமைச்சரவையில் முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் திரு. லீ!

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் புதிய தொற்றுநோய்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

புதிய சம்பவங்களில் 21 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் இங்கு வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த புதிய பாதிப்புகளுடன் சேர்த்து, சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 58,836 ஆக உள்ளது.

சிங்கப்பூரில் இந்து கோவில் உட்பட தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்கள்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…