போதைப்பொருள் உட்கொண்டதாக 13 மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுமிகள் கைது

girls-take-drugs-singapore
CNB

சிங்கப்பூரில் 13 மற்றும் 14 வயதுடைய மூன்று இளம் மாணவிகள் போதைப்பொருள் உட்கொண்டதால் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) இன்று (பிப்ரவரி 8) தெரிவித்தது.

சில சந்தர்ப்பங்களில் மூன்று சிறுமிகளும் ஒன்றாக சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர் என CNB கூறியது.

உச்சத்தை தொடும் சிங்கப்பூர் டாலரின் மதிப்பு.. S$1 = RM3.505 வரை மாற்றி கொடுக்கும் எக்ஸ்சேஞ்ச் கடைகள்

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று 14 வயது சிறுமியின் வீட்டிற்குச் சென்று சோதனை செய்த CNB அதிகாரிகள், போதைப்பொருள் உட்கொண்ட சந்தேகத்தில் சிறுமியை கைது செய்தனர்.

அவரது அறையில் இருந்து போதைப்பொருள் பாக்கெட் ஒன்று மீட்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், அவர் 13 வயதில் இருந்தே ஐஸ் வகை போதைப்பொருளை தவறாக பயன்படுத்தத் தொடங்கினார் என்பது தெரியவந்தது.

கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர் இரண்டு நண்பர்களுடன் போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்தது.

மற்ற இரண்டு சிறுமிகளும் அவர்களது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகள் தொடர்கின்றன.

சிங்கப்பூரர்& PR-களுக்கு S$10,869 என அதிகரித்த சராசரி மாத குடும்ப வருமானம்