ஆள் பற்றாக்குறை காரணமாக 5 பேருந்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்தும் நிறுவனம்

(Photo: Koh Mui Fong/TODAY)

Go-Ahead Singapore பேருந்து நிறுவனம் நாளை மறுநாள் செப். 15 புதன்கிழமை முதல் ஐந்து பேருந்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்த உள்ளது.

அந்த 5 பேருந்து சேவைகள்; விரைவு அல்லது நகர நேரடி பேருந்து சேவைகள் எண், 12e, 43e, 518, 661, 666 ஆகியவை என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

தினமும் 7 மணி நேரம் தூங்கி… S$30 வரை வெகுமதிகளை தட்டிச்செல்லுங்கள்!

இருப்பினும், Trunk சேவைகள் 12 மற்றும் 43 தொடர்ந்து செயல்படும் என்றும் அது கூறியுள்ளது.

மனிதவள பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளது.

அண்மையில் பேருந்து முனையங்களில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 குழுமங்களால், பல பேருந்து ஓட்டுனர்கள் பாதித்துள்ளன, இதனால் மனிதவள பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நிறுவனங்களில் ஓட்டுனர்கள் தனிமை… பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடலாம்

மற்றொரு பேருந்து நிறுவனமான டவர் டிரான்ஸிட், தற்போது அதன் பேருந்து சேவைகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏதும் இல்லை என்று மதர்ஷிப்பிடம் தெரிவித்துள்ளது.

இதேபோல், SMRT மற்றும் SBS நிறுவனங்கள் தற்போதைய நிலைமையை கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.

தஞ்சோங் பகார் விபத்து: சாலையில் கூடுதல் பாதுகாப்பு சேர்க்கப்படும் – LTA அறிவிப்பு.!