தொடர்ந்து கோடிக்கணக்கில் பிடிபடும் கடத்தல் தங்கம் – என்னதான் நடக்குது?

Coimbatore Flights

சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகளிடம் சமீப நாட்களில் அதிகமாக கடத்தல் நகைகள் பிடிபட்டுள்ளன.

சமீபத்தில், சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த பயணிகள் கடத்தி கொண்டு வந்த கிட்டத்தட்ட 6 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல, தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அக்டோபர் 14 முதல் சிறப்புவாய்ந்த bivalent தடுப்பூசி!

கடந்த இரு 2 நாட்களில் மட்டும் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், துபாயில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. விமான பயணிகளை வழக்கம் போல சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் திருச்சியை சேர்ந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த 2 ஊழியர்கள் கைது – சிறையில் அடைப்பு

சிங்கப்பூரில் உயரும் வெப்பநிலை: புதிய தொற்றுநோய் ஏற்படும் அபாயம்..!