கோத்தபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் சலுகை வழங்கியதா? – அமைச்சர் விளக்கம்

Gotabaya Rajapaksa not accorded any privileges

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு எந்த சலுகையும் வழங்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கூடுதலாக அவருக்கு இங்கு எந்த விருந்தோம்பலும் அளிக்கவில்லை என்பதையும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

என்னாச்சு இவர்களுக்கு… பொது வெளியில் சிறுநீர் கழித்த பெண் – கடுப்பான மக்கள்

திரு ராஜபக்சவின் சிங்கப்பூர் வருகை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம் (WP-Aljunied) கேள்வி எழுப்பினார், அதற்கு டாக்டர் பாலகிருஷ்ணன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

“பொதுவாக, முன்னாள் வெளிநாட்டு அரச தலைவர்களுக்கு சலுகைகள், விருந்தோம்பல் ஆகியவற்றை சிங்கப்பூர் வழங்காது” என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

திரு. ராஜபக்ச கடந்த மாதம் 14ஆம் தேதி தனிப்பட்ட பயண முறையில் சிங்கப்பூர் வந்தார்.

குறுகிய கால அனுமதியின்கீழ் உள்ள அவர் வரும் 11ஆம் தேதி வரை சிங்கப்பூரில் தங்கி இருப்பார் என அறிய முடிகிறது.

லாரி மோதி விபத்து… ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழப்பு